கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்த பாமக நிர்வாகி சிவசங்கர் விரட்டி விரட்டி அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு அரசியல் பிரமுகர் தாக்குதலுக்கு ஆளான நிகழ்வு மக்களை அச்சமடைய செய்துள்ளது.