ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு இத்தாலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வாடிகன் தலைவரான போப்ரான்சிஸை சந்தித்து பேசினார். இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேரளா காங்கிரஸ், கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிஸ்க்கு கிடைத்துள்ளதாக கிண்டல் செய்துள்ளது. பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் நேரத்தில் தன்னை கடவுளின் தூதுவன் எனக் கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.