தருமபுரியில் பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கும்பல், அங்கு பணிபுரிந்த முகமது ஆசிக்-ஐ அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்தது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்வது, சட்டம் ஒழுங்கை கேள்விக் குறியாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.