தமிழ்நாடு பாஜகவில் தொடர்ந்து பயணிக்கும் எண்ணம் எனக்கு கிடையாது என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்ததாக தெரிவித்த அவர், தன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார். எப்போதும் அண்ணாமலையின் குடும்பத்தில் ஒருவராக இருப்பேன் என்றும் கட்சியை விட தனக்கு சுயமரியாதை மிக முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.