தமிழ்நாட்டில் அனைத்து வகையான வணிக கட்டடங்களுக்கும், கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயம்என்ற நடைமுறையால், சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சிறு வணிகர்களின் நலன் கருதி, 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் கட்டடங்களுக்கு, இந்த சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.