நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.