தமிழகத்தில் ‘கலைஞர் கடனுதவி திட்டம்’ ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய தா.மோ.அன்பரசன், “குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெறுவதினை (ரூ.20 லட்சம் வரை) எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கி அளிக்கும் கடனுக்கு தற்போது ஆண்டுக்கு 10% வட்டி விகிதம் என்ற அளவில் இருந்து 7% என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வகையில் ‘கலைஞர் கடனுதவி திட்டம்’ ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.