கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுகவினர் நாடகத்தை அரங்கேற்றுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக ரீதியில் சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தங்களது செயல்பாடுகளை அதிமுக எம்எல்ஏக்கள் தவிர்த்து இருக்க வேண்டும் என்றார். மேலும் விஷச் சாராய விவகாரத்தில் தீவிர நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.