கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 118 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும், விஷச்சாராயம் குடித்து 229 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.