கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி தொடர்பான வழக்கில் மேலும் இதுவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் விபச்சாராயம் அருந்தி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுவரை 22 பேரை கைது செய்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.