கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்குள் இந்த ஆணையும் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆணையம் ஆலோசனை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.