கள்ளச் சந்தையில் ரேஷன் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மே மாதத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி 104 லிட்டர் மண்ணெண்ணெய் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் பொருள் கடதலுக்கு பயன்படுத்தப்பட்டு 175 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1032 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 1800 599 5950 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் தரலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
