கள்ளச்சாராய உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு இதுவரை ஆயுட்கால கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹5,000க்கு குறையாத அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் புதிதாக அமலுக்கு வந்த மதுவிலக்கு திருத்தச் சட்டம் மூலம் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி அத்தகைய குற்றங்களுக்கு ஆயுட்கால கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ₹10 லட்சத்துக்கும் குறையாத அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது