கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத ஒரு துயரம்.
100-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள் எனும் தகவல் பயமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.