கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பதற்கு பாஜக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தமிழகம் முழுவதுமாக விஷச் சாராய விற்பனையை முழுவதுமாக தடை செய்வது குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்துள்ளது.
பாஜக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். மேலும், காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.