காதலியை நடுரோட்டில் வைத்து இளைஞர் ஒருவர் ஸ்பேனரால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நள சோப்ரா பகுதியை சேர்ந்த ரோகித் என்ற இளைஞர் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஆர்த்தி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ரோகித் நடுரோட்டில் வைத்து அவரை தலையில் ஸ்பேனரை கொண்டு 18 முறை பயங்கரமாக தாக்கி கொலை செய்தார். இந்த கொடூர கொலையை சுற்றி நின்ற மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.