காமெடி நடிகர் வெங்கல் ராவ் ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தனது மருத்துவ செலவுக்கு உதவி வேண்டி அவர் வீடியோ மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவருடன் பல படங்களில் நடித்த வடிவேலு தற்போது அவரின் மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். முன்னதாக சிம்பு 2 லட்சம், KPY பாலா ஒரு லட்சம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.