தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள முக்காணி என்ற இடத்தில் சாலையோரம் நின்று தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.