பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 17 டூவீலர்கள் என மொத்தம் 19 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. வருகின்ற ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் எஸ்.பி., தலைமையில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் இது குறித்த விபரங்களுக்கு ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது 9498159193, 9498158918 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.