ஈரோட்டில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிப் பெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டவுள்ள நிலையில் அணையில் நீர் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இன்று மதியம் 3 மணியளவில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.