ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதனால் ஒரே இரவில் 60 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இங்கு 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தெற்கு காசா நகரத்தில் உள்ள கான் யூனிஸின் புறநகர்ப் பகுதியான முஸ்ஸியின் பகுதி ‘பாதுகாப்பான மண்டலமாக’ கருதப்படுகிறது. அதே பகுதியில் சனிக்கிழமை நடந்த தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர்.