ஹரியானா எம். எல். ஏ கிரண் சௌத்ரி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் நாளை காலை பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகளான இவர், 4ஆவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வானவர். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், கிரண் சௌத்ரியின் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.