தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘அமரன்’ படத்தை நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மறுபுறம், ஷூட்டிங் பிரேக்கில் அவர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அவர் பேட்டிங்கில் பந்தை சிக்சருக்கு பறக்க விடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.