ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இன்று 3வது டி20 போட்டியில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வேவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரேவில் போட்டி தொடங்கியது.
இதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 182/4 ரன்கள் குவித்தது. கேப்டன் கில் 66, ருதுராஜ் 49 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 65 ரன்களும், கிளைவ் மடாண்டே 37 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் 3.75 எக்கனாமியில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.