நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான E8 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்றதாக நடிகை குட்டி பத்மினி மீது 2011ல் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.