48 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களும் INDIA கூட்டணிக்கு 233 உறுப்பினர்களும் உள்ளனர். இதனையடுத்து தற்காலிக சபாநாயகர் நடத்திய குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. கருத்து வேறுபாடுகள் காரணமாக INDIA கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஓம் பிர்லா வெற்றி பெற்றார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி இருவரும் அவரை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்து சென்று அமர வைத்தார்