குழந்தை திருமணத் தடைச் சட்டம்-2006 மத வேறுபாடின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும் என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் முதலில் குடிமகன், பிறகு மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. பாலக்காட்டில் கடந்த 2012ம் ஆண்டு குழந்தை திருமணத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி வி.வி.குன்னிகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.