கூகுள் குரோம் பயனாளர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கூகுள் குரோம் செயலியின் பழைய வர்ஷனில் சைபர் தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள மத்திய அரசு பாதிப்பிலிருந்து தப்பிக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை பயன்படுத்தும் படி கூறியுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய இணைய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.