கடந்த சில நாள்களாக தவெக – நாதக கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் பரவியது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் ரசிகர்கள் நாதகவிற்கு வாக்களிப்பார்கள் என பேசப்பட்டது. ஆனால், விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வரை, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது நாதகவினருக்கு சற்று அதிர்ச்சியாக மாறியுள்ளது.