நடிகர் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படமும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடையதா என்று லோகேஷ் ரசிகர்களுக்கு ஆர்வம் எழுந்தது. குறிப்பாக இதுவும் lcu-க்குள் வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதற்கான பதிலை சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜே கூறிஉள்ளார். அதில், ரஜினி சாரின் படத்துக்கு நிகரான மாஸ் எலிமெண்டுகளுடன் கூடிய ‘பக்கா’ கமர்ஷியல் படமாக கூலி இருக்கும். இது lcu-ல வராது என தெரிவித்துள்ளார்.