டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போல தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஊழல் முறை கேட்டில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மதுபான கொள்முதலில் அரசு வெளிப்படை தன்மைகளுடன் நடந்து கொள்வதில்லை என்று தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.