கேரளாவின் சக்திகுலங்கரா மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானி வினேஷ் தலைமையில் இந்திய உயிரியியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது ஆழ்கடலில் வாழும் புதிய வகை நாய்சுறா மீனைக் கண்டுபிடித்தனர். இது நாய்சுறா மீன் இனமான Squalus hima-வைச் சேர்ந்தது ஆகும். இந்தத் தகவல் இந்திய உயிரியியல் மைய ஆவணப் புத்தகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.