மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எல்பிஜி சிலிண்டர்கள் தொடர்பாக போலி நுகர்வோரை அகற்ற அரசுக்கு சொந்தமான எண்ணெய் துறை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையிலான இ கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொடர்கின்றன. சில எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் போலி வாடிக்கையாளர் கணக்கு மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதாகவும் அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.