சென்னையில் நேற்று இரவு கொல்லப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலை செலுத்தினார். அதன் பிறகு பேசிய அவர், கட்சி அலுவலக வளாகத்திலேயே அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.