இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் இருக்கும். சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல செய்யும் செயல்கள் வெறுப்படைய செய்யும்.
அதன்படி பெண் ஒருவர் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் பலரும் அந்த பெண்ணை திட்டி தீர்த்து வருகிறார்கள். குழந்தைகளின் அருகே புகை பிடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறினாலும் பலருக்கும் இது புரிவதில்லை.