2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று 2023 மே மாதம் வரை நீடித்தது. இந்த கொடிய கொரோனா வைரசால் கோடிக்கணக்கானோர் பலியாகினர். இத்தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக 2023இல் உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டை விலக்கின. இந்நிலையில், கொரோனா ஆபத்து இன்னும் விலகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சராசரியாக உலகில் 1,700 பேர் மரணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.