நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரயில் நிலையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது பாஜகவினர் ரோட்டரி கிளப், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பளித்தார்கள். இதில் பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.