அதிமுக இணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக இணைப்புக்காக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்ற அவர், தொண்டர்கள் பிரிந்து கிடப்பது, கட்சிக்கு நல்லதல்ல எனக் கூறியுள்ளார். முன்னதாக, அதிமுக இணைப்புக்காக எந்த தியாகமும் செய்ய தயார் என ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், இபிஎஸ் இணைப்புக்கு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.