உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கருதப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸ்
அணிக்கு எதிரான டெஸ்ட்டுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு. சச்சின் டெண்டுல்கரே தாம் பந்துவீசிய பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் என்றும், அவர் பேட்டிங் செய்யும் போது, தவறாக பந்துவீசி விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.