தமிழக சட்டப்பேரவையின் 4ஆவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதனிடையே, இன்றையக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மாநில அரசைக்கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுவதால், அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.