தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்ய ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பி எஸ் பி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் அடையாளம் தெரியாத உண்மை குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், இந்த சம்பவத்தில் சதி செயல் ஏதாவது உள்ளதா என்பது புலனாய்வு விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் தெரியவரும் என்று கூறியுள்ளார்.