நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தெற்கு ரயில்வேயில் இயங்கும் ரயில்கள் 91.5% சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 90% ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது