உடல் சரியாக இயங்க அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் அவசியம். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போது அது உடனடியான பாதிப்பு மற்றும் நீண்டகால பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக அந்த பாதிப்பு சருமத்தில் நன்கு வெளிப்படும். சருமத்தை பாதுகாப்பதில் வைட்டமின் சி முக்கியப்பங்கு வகிக்கிறது
பளபளப்பு:
எந்த நிறமுடைய சருமமாக இருந்தாலும் பொலிவுடன் இருப்பதே ஓர் அழகுதரும். வைட்டமின் சி சருமத்திற்கு பளபளப்பையும், பிரகாசத்தையும் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் சரும நிறத்தையும் இயற்கையாகவே கூட்டுகிறது
தன்மை:
சருமத்திற்குத் தேவையான கொலாஜன் சுரப்பில் வைட்டமின் சி முக்கியப் பங்காற்றுகிறது. இது சருமம் தளர்ச்சியடைதல், கோடு மற்றும் சுருக்கங்கள் விழுதலை தடுக்கிறது.
நிறம்:
சரும நிறத்தை இயற்கையாகவே அதிகரிக்கும் வைட்டமின் சி ஆனது, ஹைபர்பிக்மண்டேஷனை எதிர்த்து போராடி, சரும நிறத்தை கூட்டுகிறது. கருவளையங்களை குறைப்பதிலும் இதன் பங்கு அதிகம்.
சூரிய ஒளி:
சூரிய ஒளியில் சருமம் அதிகம் பாதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். வைட்டமின் சி சூரிய கதிர்களிலிருந்து நம்மை பாதுகாப்பதுடன், அதிக வெப்பத்தால் ஏற்பட்ட காயங்களையும் குணமாக்குகிறது.