விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றார். சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் பேரவைத் தலைவர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.