கைதாகி சிறையில் இருக்கும் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு குண்டர் சட்டத்தில் இருந்து மட்டும் இடைக்கால ஜாமின் அளித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்த ஜாமீன் மற்ற வழக்குகளுக்கு பொருந்தாது என்றும் நீதிபதி குறிப்பிட்டு கூறியுள்ளதால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. இவருக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டது குறிப்பிடத்தக்கது.