சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அவரை ஏன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கூடாது என்றும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும் என்று தமிழக அரசு தரப்பு வாதிட வழக்கு விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.