தமிழக அரசு அளிக்கும் சாதி சான்றிதழ், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயன்கள் பெற உதவுகிறது. இதை ஆன்லைனில் எளிதில் விண்ணப்பித்து பெறலாம். பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர். https://www.tnesevai.tn.gov.in/ சென்று, பயனாளர் நுழைவு என்ற இடத்தை அழுத்தினால் திறக்கும் பக்கத்தில் விவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பிறகு, இணையதளத்தில் பிரத்யேக LOG IN, கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழைய வேண்டும். பின்னர் வருவாய்த்துறை சேவைக்கு சென்று, சாதி சான்றிதழ் பிரிவை தேர்ந்தெடுத்து, CAN எண்ணை விண்ணப்பித்து பெற்று, பெற்றோர் சாதி சான்றிதழ் எண்ணை குறிப்பிட வேண்டும். இதையடுத்து, விண்ணப்பதாரர் புகைப்படம், முகவரி சான்று, பெற்றோர் சாதி சான்றை பதிவேற்றி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.