நாய், பறவைகளை கணக்கெடுக்கும் தமிழக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், இதற்காக அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்தார். மேலும், வன்னியர் இடஒதுக்கீடு, சமூக நீதி பிரச்னை குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.