உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிப்பதுடன், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார். இந்த கொடூர விபத்து குறித்து அம்மாநில காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.