வேங்கை வயலில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி மார்க்ஸ் ரவீந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணை கோரிய வழக்கை அடுத்த வாரம் ஒத்தி வைத்தது.